உடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவாகக் கொடுக்கக்கூடிய சத்தான உணவு இது.
சத்தான சுவையான உளுத்தம் கஞ்சி
தேவையான பொருட்கள் :
தோலில்லாத வெள்ளை உளுந்து – 100 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
பால் – 1/2 லிட்டர்
பனைவெல்லம் – தேவைக்கேற்ப
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
* பாலை நன்றாகக் காய்ச்சி ஆறவிடவும்.
* உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் நீரில் கழுவி, குக்கரில் வைத்து நன்றாகக் குழைய வேகவைத்துக்கொள்ளவும்.
* விசில் போனவுடன் குக்கரை திறந்து வெந்த பருப்பையும் அரிசியையும் கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, பாலை அதில் சேர்க்கவும்.
* தேவைக்கேற்ப பனைவெல்லம் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக் கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* சுவையான உளுத்தம் கஞ்சி தயார்.
* விருப்பப்பட்டால் ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம். உளுத்தம்பருப்புக்குப் பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதுபோல கஞ்சி செய்யலாம்.