35.4 C
Chennai
Monday, Jun 24, 2024
sl3832
சிற்றுண்டி வகைகள்

காளான் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய காளான் – 1 கப்,
பாசிப்பருப்பு – 1/4 கப்,
பச்சரிசி மாவு – 1/2 கப்,
ஓட்ஸ் – 1/2 கப்,
தேங்காய்த் துருவல் – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க…

எண்ணெய் – சிறிது,
கடுகு – 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 3,
இட்லி மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஓட்ஸையும் அரிசி மாவையும் சேர்த்து கடாயில் பச்சை வாசனை போக வறுக்கவும். வழக்கமாக கொழுக்கட்டை மாவு தயாரிப்பது போல் நீர் ஊற்றி கொதிக்க விட்டு உப்பு, எண்ணெய் சேர்த்து கிளறவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதனுடன் வறுத்து உடைத்த பாசிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறவும். இவற்றையும் காளான் வெந்ததும் அதனுடன் கொழுக்கட்டை மாவையும் சேர்த்து கலந்து கிளறவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கொழுக்கட்டை பிடித்து ஆவியில் வேக விட்டு இட்லி மிளகாய் பொடி தூவி பரிமாறவும். sl3832

Related posts

மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்வது எப்படி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பேபிகார்ன்

nathan

மும்பை ஸ்பெஷல் தவா புலாவ் செய்வது எப்படி

nathan

மாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா

nathan

சுறாப்புட்டு

nathan

சத்தான திணை கார பொங்கல்

nathan

சிறு பருப்பு முறுக்கு

nathan

கைமா இட்லி

nathan

வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்…!

nathan