36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
தொப்பை குறைய

தொப்பையை கரைக்க உதவும் ஜூஸ்

எளிய முறையில் எப்படி தொப்பையை குறைக்கலாம் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தொப்பையை கரைக்க உதவும் ஜூஸ்
நம்மில் பலருக்கும் வேண்டாத ‘வளர்ச்சி’யாய் தொப்பை இருக்கிறது. அதற்கு, நமது வாழ்க்கை முறை மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் ஒரு காரணம்.

வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் கரைக்க, தண்ணீர், வெள்ளரிக்காய், எலுமிச்சம்பழச்சாறு, புதினா, இஞ்சி கலந்த ‘ஜூஸ்’ உதவும். இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால் தொப்பை கரையும்.

சரி, இந்த ஜூஸில் இடம்பெறும் பொருட்களில் என்னென்ன சத்துகள் அடங்கியிருக்கின்றன என்று தெரியுமா?

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம். அதோடு, உடலின் அல்கலைன் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.

எலுமிச்சம்பழச்சாறில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இது, உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா, வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது.

இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்யக்கூடியதாகும்.

தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின்போது தசை மற்றும் மூட்டுகளில் தொய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து பருகிவந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

Related posts

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க சிறந்த வழிகள்!…

sangika

தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிற்றை பெற பெண்களுக்கு ஆலோசனை

nathan

சூப்பர் டிப்ஸ்,!தொப்பையைக் குறைக்க இதை ஒரு கப் சாப்பிட்டால் போதும்.!

nathan

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க இவற்றை செய்யுங்கள்!…

sangika

முப்பதே நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan

வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சி தேவை

nathan

உங்களுக்கு தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

எளிதில் தொப்பையை குறைக்கும் வழிகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க! 10 நாட்களில் தட்டையான வயிற்றை பெறுவது எப்படி?

nathan