கருஞ்சீரகம் அஜீரணத்தை போக்கும். வயிற்றுவலியை குணமாக்கும். உடல் சூட்டை அதிகரித்து இதமாக்கும்.
அஜீரணத்தை போக்கும் கருஞ்சீரகம் சாதம்
தேவையான பொருட்கள் :
கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 5 பற்கள்
மிளகு – 10 (தூளாக்கிக் கொள்ளவும்)
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
பச்சரிசி – 200 கிராம்(வேகவைத்துக் கொள்ளவும்)
செய்முறை :
* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் நெய் ஊற்றி, கடுகை தாளிக்கவும். பின்பு அதில் கருஞ்சீரகத்தை கொட்டி வறுத்துவிட்டு, வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் பூண்டை கலந்து கொள்ளவும்.
* அடுத்து அதில் மிளகு தூள், வடித்து வைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து நன்றாக கிளறி சுவைக்கவும்.
குறிப்பு :
* இதற்கு தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும். சளி, இருமல், உடல்வலி இருக்கும்போது இதை தயார் செய்து சாப்பிடலாம். குளிர் காலத்திற்கும் ஏற்ற உணவு.
* பெண்கள் மாதவிடாய் காலங்களில் இதை தயாரித்து சுவைக்கலாம். அஜீரணத்தை போக்கும். வயிற்றுவலியை குணமாக்கும். உடல் சூட்டை அதிகரித்து இதமாக்கும்.