குழந்தைகளுக்கு இந்த வாழைப்பழ பணியாரம் மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இனிப்பான வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
சிவப்பு அரிசி – அரை கப்
மைதா மாவு – அரை கப்
வெல்லம் – 1 கப்
பெரிய கனிந்த வாழைப்பழம் – 2
ஏலக்காய் – 3
தேங்காய் துருவல் – கால் கப்
இட்லி சோடா – ஒரு பின்ச்
எண்ணெய் – தேவையான அளவு
பாதம் பொடித்தது – ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை :
* சிவப்பு அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
* பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஊறிய அரிசியை மிக்சியில் நைசாக அரைத்து அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய், மைதா சேர்த்து அரைக்கவும். கடைசியாக வாழைப்பழத்தை நறுக்கி சேர்த்து அரைக்கவும்.
* வெல்லத்தை பொடித்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு ஆறியதும் வடிகட்டிகொள்ளவும்.
* மாவில் இட்லி சோடா, பொடித்த பாதம், சுக்குபொடி, தேங்காய் துருவல், வெல்ல கரைசலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* குழி பணியார சட்டியை காயவைத்து லேசாக எண்ணெய் ஒரு துளி விட்டால் போதும். மாவை ஊற்றி தீயின் தனலை மிதமாக வைத்து மூடிபோட்டு 3 நிமிடம் வேக விடவும். மறுபுறம் திருப்பி போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி போட்டு 3 நிமிடம் வேகவிடவும்.
* சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் ரெடி.