30.9 C
Chennai
Wednesday, Jul 30, 2025
14 potatopulao 600
சைவம்

உருளைக்கிழங்கு புலாவ்

உருளைக்கிழங்கு புலாவ் ரெசிபியானது மிகவும் அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு புலாவ் ரெசிபி. இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் உருளைக்கிழங்குடன், மூலிகைகளான பார்ஸ்லி, புதினா ஆகியவற்றை சேர்ப்பதால், இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

அதிலும் காலையில் வேகமாக சமைக்க நினைப்பவர்கள், இந்த புலாவ் ரெசிபியை ட்ரை செய்யலாம். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்தது) பார்ஸ்லி – 2 குச்சி (பொடியாக நறுக்கியது) புதினா – 1 குச்சி (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது) சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் பாசுமதி அரிசி – 1 1/2 கப் மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கிராம்பு – 3 ஏலக்காய் – 4 பட்டை – 1 தண்ணீர் – 2 கப் உப்பு – தேவையான அளவு நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து, அரிசியைக் கழுவி போட்டு, சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, குக்கரை மூடி 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து, பின் விசிலை போட்டு, 4 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் நறுக்கி வைத்துள்ள பார்ஸ்லி, புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, 10 நிமிடம் குக்கரை மூடி வைத்து, பின் திறந்தால், சூப்பரான உருளைக்கிழங்கு புலாவ் ரெடி!!!

14 potatopulao 600

Related posts

பன்னீர் பட்டாணி மசாலா

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி

nathan

ஐயங்கார் புளியோதரை

nathan

கலவை காய்கறி மசாலா

nathan

தக்காளி பிரியாணி

nathan

தக்காளி சீஸ் ரைஸ்

nathan

தொண்டக்காய பாப்புல பொடி வேப்புடு

nathan

பூண்டு சாதம்

nathan

கத்திரிக்காய் பிரியாணி

nathan