சாலட் வகைகள்

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி

ஜீரணம் ஆகாமல் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி தயிர் பச்சடியை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

தயிர் – ஒரு கப்,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
சின்ன வெங்காயம் – 10,
கடுகு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

* வெங்காயத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

* பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

* இஞ்சியை தோல் சீவி சிறிய துண்டுகளாக்கவும்.

* இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை தயிருடன் கலக்கி உப்பு சேர்க்கவும்.

* கடாயில் சிறிதளவு எண்ணெயை காய வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிர் கலவையில் சேர்க்கவும்.

* சத்தான இஞ்சி தயிர் பச்சடி ரெடி.

* இதை சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். சாப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

Related posts

சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்

nathan

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

nathan

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

nathan

சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்

nathan

கொய்யா பழ துவையல்

nathan

வாழைத்தண்டு – மாதுளை ரெய்தா

nathan

பூசணிக்காய் பழ ஷேக்

nathan

காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ் பழ சாலட்

nathan

கேரட் – வெள்ளரி சாலட்

nathan