என்னென்ன தேவை?
வெஜிடபிள் ஸ்டாக் – 2 கப்,
‘சைனீஸ்காப்பேஜ்’ எனப்படும் பக்சாய் (அரிந்தது) – 2 கப்,
அரிந்த கோஸ் – 2 கப்,
துருவிய கேரட் – 1 கப்,
நறுக்கிய லீக்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
செலரி – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் (கீறியது) – 6,
கலங்கல் இஞ்சி – 50 கிராம்,
நறுக்கிய காளான் – 1/4 கப்,
நசுக்கிய லெமன் கிராஸ் – 1/2 கப்,
உப்பு – சிறிதளவு,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1/4 கப்.
எப்படிச் செய்வது?
பக்சாய், கோஸ், கேரட் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் லீக்ஸ், செலரி, ெலமன் கிராஸ், பச்சை மிளகாய் சேர்த்துக் கொதிக்க விடவும். கலங்கல் இஞ்சியையும் காளானையும் லேசாக வதக்கி இத்துடன் சேர்க்கவும். இதனை வடிகட்டி, கொதிக்க வைத்த காய்கறி-தண்ணீருடன் சேர்க்கவும். அத்துடன் வெஜிடபிள் ஸ்டாக்கையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து எலுமிச்சைச்சாறை விட்டு பரிமாறவும்.