29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
சூப் வகைகள்

நூல்கோல் சூப்

என்னென்ன தேவை?

நூல்கோல் – 100 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 25 கிராம்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
சீரகத்தூள்- கால் டீஸ்பூன், உப்பு, வெண்ணெய் – அரை டீஸ்பூன், கொத்த
மல்லித்தழை – சிறிது.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகத்தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய நூல்கோல் துண்டுகள் சேர்த்து வதக்கி, 8 நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக விடவும். நூல்கோல் வெந்ததும் அதை கொஞ்சம் ஆறவிட்டு, பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதை மறுபடி இன்னொரு நான் ஸ்டிக் பாத்திரத்துக்கு மாற்றி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லித்தழையும், வெண்ணெயும் சேர்த்துப் பரிமாறவும்.

Related posts

சத்தான சுவையான பச்சை பயறு சூப்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

nathan

சோயா கிரானுல்ஸ் – தக்காளி சூப்

nathan

டோம் யும் சூப்

nathan

முருங்கை பூ சூப்

nathan

ப்ராக்கோலி சூப்

nathan

பரங்கிக்காய் சூப்

nathan

நண்டு தக்காளி சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan