29.3 C
Chennai
Sunday, Jul 27, 2025
201608061115326634 How to make delicious Nattu kozhi kuzhambu SECVPF
அசைவ வகைகள்

சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி

பாய்லர் கோழியை விட நாட்டுக்கோழி உடலுக்கு நல்லது. நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருள்கள் :

நாட்டுக்கோழி – 1/2 கிலோ
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
தயிர் – 2 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிது
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

வறுத்து பொடிக்க :

மிளகாய் வத்தல் -5
தனியா – 5 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
மிளகு – 1 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் – 100 கிராம்

தாளிக்க :

எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
பட்டை – 1 இன்ச் அளவு
கிராம்பு – 2
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* நாட்டுக்கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும்.

* தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், தனியா, சீரகம், மிளகு, தேங்காய் துருவல் அனைத்தையும் தனித்தனியாக போட்டு வறுத்த பின் அடுப்பை அணைத்து ஆற விடவும். ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* தேங்காயை மட்டும் தனியாக தண்ணீர் சேர்த்து விழுதாகவும், மற்றவற்றை பொடியாக அரைத்து கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், திரித்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

* பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.

* மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

* சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி. 201608061115326634 How to make delicious Nattu kozhi kuzhambu SECVPF

Related posts

காரசாரமான இறால் மசாலா செய்வது எப்படி

nathan

கிராமத்து மீன் குழம்பு

nathan

எப்படி என்று பார்க்கலாம் ஹாங்காங் ஃப்ரைடு இறால்

nathan

சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை

nathan

மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

சிக்கன் பிரியாணி செய்முறை..

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல்

nathan

நிமிடத்தில் தயாரிக்கும் இறால் மற்றும் குஸ்குஸ் உடன் தயிர் மற்றும் ஹம்மஸ் சாஸ்:

nathan

பாத்தோடு கறி

nathan