24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
201608010850470504 how to make dates kheer SECVPF
ஆரோக்கிய உணவு

குழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சம்பழ கீர்

குழந்தைகளுக்கு இந்த பேரீச்சம்பழ கீர் மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சம்பழ கீர்
தேவையான பொருட்கள் :

பேரீச்சம் பழம் – 20,
பால் – 2 கப்,
தேங்காய்ப் பால் – அரை கப்,
சர்க்கரை – கால் கப்
சிறிய துண்டாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 3 டேபிள்ஸ்பூன்,
சீவிய முந்திரி, பாதாம் – 3 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் தூள் – சிறிதளவு,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

* பேரீச்சம் பழங்களை அரை கப் வெதுவெதுப்பான பாலில் 20 நிமிடம் ஊற விடவும்.

* கடாயில் நெய்யை சூடேற்றி முந்திரி, பாதாம், பேரீச்சம் பழங்களை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

* ஊற வைத்திருக்கும் பேரீச்சம் பழங்களை சிறிது பாலுடன் சேர்த்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

* பாலை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பேரீச்சம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைத்து கெட்டியாகும் வரை வைக்கவும்.

* இத்துடன் நெய்யில் வறுத்த பாதியளவு பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள், தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

* மேலே சில நெய்யில் வறுத்த பருப்புகள், பேரீச்சம் பழம் தூவி அலங்கரிக்கவும்.

* குளிர்ச்சியாகவும் மிதமான சூட்டிலும் பரிமாறலாம்.

* இதிலேயே இனிப்பு சேர்க்க தேவையில்லை. சிறிதளவு சேர்த்தால் போதுமானது. 201608010850470504 how to make dates kheer SECVPF

Related posts

உங்களுக்கு தெரியுமா பனஞ்சர்க்கரையில் உள்ள ஏராளமான பயன்கள்.!

nathan

சுவையான அரைக்கீரை கடைசல்

nathan

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கும் சிறந்த உணவிகள்!

nathan

அரிசி தரும் அரிதான நன்மைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிக அளவில் வைட்டமின் சி அடங்கிய உணவுகள் எவை தெரியுமா?

nathan

ஓமம் பயன்படுத்தும் முறை

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் காலையில் ஆப்பிள்சிடர் வினிகர் குடிப்பதால் என்ன நடக்கும்னு தெரியுமா?

nathan

தயிரின் அற்புதங்கள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

40 வயதை நெருங்கி விட்டீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan