25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
chukka
அசைவ வகைகள்

மட்டன் சுக்கா : செய்முறைகளுடன்…!

தேவையான பொருள்கள் :

எலும்பு நீக்கிய மட்டன் – கால் கிலோ
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டுபேஸ்ட் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 15
தேங்காய் துருவியது – 3 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
கடுகு – 1 ஸ்பூன்
சமையல் எண்ணெய் – ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
1. தேங்காய், முந்திரி பருப்பு இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் சற்று கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

2. மட்டனை கழுவி அதோடு சிறிதளவு உப்பு ,மஞ்சள்தூள், 1 ஸ்பூன் இஞ்சி, பூண்டுபேஸ்ட் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போட்டு தாளிக்கவும்.

4. கடுகு வெடித்தவுடன் அதோடு சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் இஞ்சி, பூண்டுபேஸ்ட் போட்டு வதக்கி அதனுடன் மஞ்சள்தூள் ,மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளரவும்.

5. மசாலா எல்லாம் நன்கு வதங்கிய பின் வேக வைத்த மட்டன் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கி கடாயை மூடி 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

6. அதோடு அரைத்த தேங்காய் விழுது 1 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் நன்கு வற்றியவுடன் கிளரி இறக்கவும். சுவையான மட்டன் சுக்கா ரெடி.chukka

Related posts

சூப்பரான கணவாய் மீன் வறுவல்

nathan

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா

nathan

செட்டிநாடு மிளகு கோழி வறுவல்: ரமலான் ஸ்பெஷல் ரெசிபி

nathan

எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்முறை விளக்கம்

nathan

சுவையான மசாலா மீன் ப்ரை

nathan

பஞ்சாபி சிக்கன்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குக்கரில் சிக்கன் பிரியாணி குழையாமல் செய்வது எப்படி

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: ஸ்பைசி சிக்கன் ஆப்கானி

nathan

மட்டன் பிரியாணி

nathan