என்னென்ன தேவை?
சேமியா – 1 கப்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
பிரெட் – 4 ஸ்லைஸ்,
மைதா – 1 கப்,
ரவை – 1/2 டீஸ்பூன்,
கேரட் துருவல் – 1/2 கப்,
எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பிரெட்டை தூளாக்கிக் கொள்ளவும். சேமியாவை தண்ணீரில் போட்டு, அதை 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். வெந்தவுடன் சேமியாவை வடிகட்டி, எண்ணெய் ஊற்றி உதிர்த்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கேரட்டை வதக்கி, சேமியாவை போட்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகுத் தூள் சேர்த்து, பிரெட்டையும் சேர்க்கவும். பின் அதை ஆற வைக்கவும். மைதாவையும் ரவையையும் கலந்து, அதில் தண்ணீர் ஊற்றி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அதைத் திரட்டி நடுவில் சேமியா கலவையை வைத்து மூடி ரோல் மாதிரி செய்து கொள்ளவும். அவற்றை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சேமியா கேரட் பிரெட்ரோல் தயார்.