5 18 1463566283
கை பராமரிப்பு

உங்கள் கைகள் சொரசொரப்பாக, கடினமாக இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க.

வீட்டிலிருக்கும் பெண்களுக்கு நாள் முழுவதும் ஓயாமல் வேலை இருந்து கொண்டேயிருக்கும். ஓயாமல் கைகளுக்கு வேலை கொடுத்தால், கைகள் தன் பொலிவை இழந்துவிடுமே?அதற்காக அப்படியே விட்டுவிடாதீர்கள் பெண்களே! உங்கள் அழகினை நீங்கள்தான் பராமரிக்க வேண்டும்.

வீட்டில் பாத்திரங்கள் தேய்த்து , துணிகளை துவைத்து கைகள் வறண்டு போயிருக்கா? டிடர்ஜென்டுகளால் உங்கள் கைகள் கடினமாகியிருக்கா ?

உள்ளங்கைகள் சொரசொரப்பா இருந்தா நாலு பேர் மத்தியில கை கொடுக்க கொஞ்சம் சங்கோஜம் படத்தான் செய்வோம்.

என்னதான் முகம் அழகா இருந்தாலும் இந்த கைகள் அசிங்கமா இருக்கேன்னு எல்லாம் ஃபீல் பண்ணாதீங்க. சிம்பிள் டிப்ஸ்ல உங்கள் கைகளை அழகாக்குங்க

கடைகளில் வாங்கும் க்ரீம்கள் அப்போதைக்கு மிருதுத்தன்மையைக் கொடுத்தாலும், அதன்பின் மீண்டும் சொரொசொரப்பாகியும், வறண்டும் போய்விடும். இதையெல்லாம் விட்டு விட்டு நிரந்தரமாக இயற்கை வழியில சரி பண்ணுங்க தோழிகளே!

இயற்கை மாய்ஸ்ரைஸர் : இந்த மாய்ஸ்ரைஸர் உங்கள் கைகளை பட்டுப்போல் ஆக்கும். கைகளில் இருக்கும்வெடிப்பு, சொரசொரப்பினை போக்கி,மென்மையைத் தரும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையானவை : தேன் மெழுகு- 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்-2 டீஸ்பூன் கோகோ பட்டர் -1 டேபிள் ஸ்பூன் இந்த மூன்றையும் இரு மடங்கு கொதிக்கும் நீரில் போடவும். அவைகளை கரையும் வரை கொதிக்க விடுங்கள். அதன் பின் பாதாம் எண்ணெய் அல்லது லாவண்டர் அல்லது எலுமிச்சை எண்ணெயை சில துளிகள் இடவும்.

பிறகு சோற்றுக் கற்றாழையின் சதைபகுதி, தேன் அகியவற்றையும் சேர்த்து எல்லாம் சேர்ந்து நன்றாக கரையும் வரை கொதிக்க விடவும்.இப்போது இந்த கலவையை ஆற விடுங்கள்.

குளிர்ந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். இது நன்றாக குளிர்ந்து, உறைந்துவிடும். இதனை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் நன்றாக க்ரீம் போல் ஆகிவிடும்.

இதனை ஒரு சுத்தமான கன்டெயினரில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவில் இதனை கைகளில் நன்றாக தடவி தூங்கச் செல்லுங்கள். க்ரீம் உபயோகப்படுத்தியதும் மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கைகள் மிகவும் மிருதுவாகி, சொரசொரப்பு காணாமல் போய்விடும்.

ஓட்ஸ் : வேக வைத்த மற்றும் வேக வைக்காத ஓட்ஸ் இரண்டுமே உள்ளங்கைகளில் இருக்கும் சிறு சிறு கீறல்களுக்கு நல்ல ரிசல்ட்டைக் கொடுக்கும்.

கைகள் மூழ்கும் அளவிற்கு சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கைப்பிடி ஓட்ஸ் போடவும். சில துளி ஆலிவ் எண்ணெயையும் சேர்க்கவும்.

இப்போது அதில் கைகளை 15 நிமிடங்கள் அமிழ்த்தவும். இது கைகளைல் இருக்கும் அழுக்குகளை அகற்றி சருமத்திற்கு மென்மை அளிக்கிறது. வெடிப்புகள் போய்விடும்.

சோற்றுக் கற்றாழை : உங்கள் வீட்டில் சோற்றுக் கற்றாழை இருந்தால் எதற்குமே கவலைப்பட வேண்டாம் சருமம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.

சோற்றுக் கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து கைகளில் தினமும் தடவுங்கள். காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். தினமும் செய்தால், உங்கள் கைகள் நிறம் பெற்று மிருதுவாகும்.

தேங்காய் எண்ணெய் : கைகளில் இருக்கும் கடினத்தன்மையை தேங்காய் என்ணெய் போல் குணமளிப்பது வேறெதுவுமில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயால் கைகளுக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளை க்ளவ்ஸ் மூலம் மூடி விடுங்கள்.இதனால் எண்ணெய் சருமத்திலேயே தங்கி ரிப்பேர் செய்யும்.

இதைத் தவிர்த்து கெமிக்கல் கலந்த சோப் பாத்திரம் விளக்க மற்றும் துணி துவைக்க பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் கையின்அழகினையே கெடுத்து விடும்.

பாத்திரம் விளக்கும் முன் சிறிது தேங்காய் எண்ணெயையோ அல்லது ஆலிவ் எண்ணெயையோ கைகளில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் கெமிக்கல் உங்கள் சருமத்திற்கு அதிக எரிச்சல் தராமல் காக்கும்.

5 18 1463566283

Related posts

கைகள் கருப்பாக உள்ளதா? இதோ டிப்ஸ்

nathan

உலோக அணிகலன்கள் அணிவதன் நன்மைகள் பற்றி தெரியமா?

sangika

அழகு குறிப்புகள்:கைகளின் அழகு குறையாமலிருக்க. Beautiful hands

nathan

கைகளில் உள்ள கருமையை போக்க சில வழிகள்

nathan

அக்குளில் கருமை விடுபட 10 பயனுள்ள குறிப்புகள்!

nathan

உங்க கையும், காலும் கருப்பா இருக்கா? அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்!

nathan

மென்மையான கைகள் வேண்டுமா

nathan

கைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க எளிய வழிகள்

nathan

விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க -இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan