mX6KgfM
கை பராமரிப்பு

மெஹந்தி நிறம் பிடிப்பதே இல்லையா!

எப்போது மெஹந்தி போட்டாலும் எனக்கு நல்ல நிறம் பிடிப்பதே இல்லை. என்ன கோளாறாக இருக்கும்? கடைகளில் ஸ்பெஷலாக ஏதேனும் கலப்பார்களா நிறம் வருவதற்கு?

மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பிரேமா வடுகநாதன்

கல்யாண பெண்கள் மெஹந்தி போட்டுக் கொள்வது என்பது நம் நாட்டில் ஒரு சடங்காக ஆகிவிட்டது. அந்த மணப்பெண்ணின் கைகளில் மருதாணி நன்றாக சிவந்து இருந்தால், அப்பெண்ணின் வருங்கால கணவன் அவளை மிகவும் நேசிப்பான் என்பது பழமொழி. நல்ல கலர் வருவதற்கான சில உத்திகளையும் சொல்ல வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகு சிறிது மெஹந்தி ஆயில் தடவவும்.

மெஹந்தி போட்டு சிறிது உலரத் தொடங்கும் முன், லெமன் ஜூஸ் + சர்க்கரை கரைசலை சிறிது பஞ்சினால் நனைத்து டிசைன் மேல் தடவ வேண்டும். இதே போல 7 -8 முறை செய்யவும். மருதாணி டிசைன் குறைந்தது கைகளில் 6-7 மணி நேரம் இருக்க வேண்டும். பிறகு முனை மழுங்கிய கத்தியால் சுரண்டி எடுத்த பிறகு, ஒரு இரும்பு தவாவில் 10 கிராம்பு போட்டு வதக்கவும். அப்போது வரும் புகை மேல் மருதாணி இட்ட கைகளை காண்பிக்க வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் கையில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் (குறைந்தது 5-6 மணி நேரம்). ஆரஞ்சு கலரில் இருந்த மருதாணி டிசைன் சிறிது சிறிதாக சிவப்பு நிறம், பிறகு டார்க் பிரவுன் ஆக மாறும். இதுதான் ரியல் மருதாணி கலர். குளிர்ச்சியான உடல்வாகு இருப்பவர்க்கு மெஹந்தி டார்க் ஆக சிவக்காது. ஆனால், மேற்சொன்னபடி செய்தால், கண்டிப்பாக நல்ல கலர் வரும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை!

ப்ளீச், எண்ணெய், சோப்பு போன்றவற்றை மெஹந்தி போட்ட கைகளில் உபயோக படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்
கடைகளில் விற்கும் மெஹந்தி கோன்களில் தரம் பார்த்து வாங்கவும். சில மெஹந்தி பேஸ்டில் நல்ல கலர் வருவதற்காக சில கெமிக்கல்ஸ் கலப்பதாக சொல்லப்படுகின்றன. ரோட்டில் இருக்கும் மெஹந்தி வாலாக்கள் சிலர் சுண்ணாம்பு கரைசலை மெஹந்தியில் கலப்பதாகவும் வதந்தி இருக்கிறது. இதனால் சரும அலர்ஜி வர வாய்ப்புகள் அதிகம்.mX6KgfM

Related posts

கைகள் பராமரிப்பு

nathan

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்

nathan

கைகள் நிறம் மங்கி, பொலிவின்றி இருக்கிறதா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!

nathan

கை மட்டும் வெயிலால கருப்பாயிடுச்சா? அதை சீக்கிரமாக போக்கும் வீட்டு வைத்தியங்கள்!

nathan

மெஹந்தி பிரியரா நீங்கள்? அப்ப உடனே இத படிங்க…

sangika

கைகளில் உள்ள வறட்சியைப் போக்க சில அற்புத வழிகள்!!!

nathan

மோதிரங்கள் அணிவதில் சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?…

sangika

குளிர் காலத்தில் கைகளின் வறட்சியைப் போக்கும் மசாஜ்

nathan

எப்படி கைகளை சுத்தம் செய்வது?….

sangika