35.8 C
Chennai
Monday, Jun 17, 2024
201607200801277561 How to make tamarind Aval SECVPF
சிற்றுண்டி வகைகள்

புளி அவல் செய்வது எப்படி

சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு புளி அவல். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

புளி அவல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கெட்டி அவல் – 1 கப்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவையானது
உப்பு – தேவையானது

தாளிக்க :

கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2
வேர்க்கடலை – 10
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

* அவலை நன்றாக தண்ணீரில் அலச வேண்டும்.

* புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து லேசாக சூடு பண்ணவேண்டும்.

* ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அவல், புளித்தண்ணீர், மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து பிசறி மூடி வைக்கவேண்டும்.

* பத்து நிமிடம் அப்படியே ஊறவைக்கவேண்டும்.

* அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊறவைத்த அவலை சேர்த்து சிறிது நேரம் அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளற சுவையான புளி அவல் ரெடி.

* டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட சிறந்த உணவு இது.201607200801277561 How to make tamarind Aval SECVPF

Related posts

பெப்பர் இட்லி

nathan

முள்ளங்கி ஸ்பெஷல் உருண்டை

nathan

பார்லி பொங்கல்

nathan

சுவையான சத்தான ஜவ்வரிசி தோசை

nathan

கம்பு புட்டு

nathan

சூப்பரான பீட்ரூட் வடை

nathan

பன்னீர் போண்டா

nathan

சோயா தட்டை

nathan

வரகரிசி முறுக்கு செய்வது எப்படி?

nathan