வாழைப்பூவில் பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டவர்கள் சற்று வித்தியாசமாக வடை செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வாழைப்பூ வடை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ – 1
துவரம்பருப்பு – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 6
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சின்னவெங்காயம் – 10
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை :
* வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாழைப்பூவை சுத்தம் செய்து விட்டு சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் மஞ்சள், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* துவரம் பருப்பினை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்தபின் அதனுடன் சோம்பு, சீரகம், மிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
* ஒரு பாத்திரத்தில் அரைத்த துவரம் பருப்பு, வாழைப்பூ, நறுக்கி வெங்காயம், கறிவேப்பிலையை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
* சுவையான வாழைப் பூ வடை ரெடி!