tthokkuuuu
​பொதுவானவை

இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்…!

தேவையான பொருள்கள்:

அதிக நார் இல்லாத இஞ்சி – 100 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – சிறிது
தனி மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
கடுகு, வெந்தயம் – அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் – தாளிக்க

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

அரை தேக்கரண்டி அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து வேகுமளவு வதக்கவும்.

வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும். ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற விடவும்.

கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.tthokkuuuu

Related posts

நண்டு ரசம்

nathan

உங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan

சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்

nathan

விவாகரத்தை தடுப்பதற்கான சில வழிமுறைகள்

nathan

தனியா ரசம்

nathan

சுவையான சாம்பார் பொடி செய்முறை

nathan

சுவையான மாங்காய் ரசம்

nathan

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

nathan

கேரளா இறால் கறி,TMIL SAMAYAL

nathan