nap 1
ஆரோக்கியம் குறிப்புகள்

குட்டித் தூக்கம் போடுறவரா நீங்க? போச்சு! போச்சு!

எவ்வளவுதான் ஆசை தீரத் தூங்கினாலும், வீட்டிலோ, பேருந்திலோ, கழிவறையிலோ எக்ஸ்ட்ராவாக ஒரு குட்டித் தூக்கம் போடுவதன் ஆனந்தமே தனிதான்” என்று எண்ணும் பேர்வழியா நீங்கள்? வந்துவிட்டது, உங்கள் தலைக்கு ஆபத்து!

இதயவியலுக்கான அமெரிக்க மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில், குட்டித் தூக்கம் போடுவது நமது உடலுக்குத் தீங்கானது என்று தெரியவந்திருக்கிறது.

உலகெங்கும் உள்ள சுமார் மூன்று லட்சம் மக்கள் பங்குபற்றிய இந்த ஆய்வின் முடிவில், வேலைகளுக்கு இடையே சுமார் 40 நிமிடம் வரை தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் அதிக கொழுப்பு, அதீத இரத்த அழுத்தம், இடுப்பைச் சுற்றிலும் கொழுப்புப் படிதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாவதாகத் தெரியவந்துள்ளது.

அதேவேளை, சுமார் ஒன்றரை மணிநேரம் வரை சற்றே நீண்ட குட்டித் தூக்கம் போடுபவர்கள், இரண்டாவது வகை நீரிழிவு நோய்க்கு ஆளாக 50 சதவீத வாய்ப்புகள் அதிகரிப்பதாகவும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

இதில் ஆறுதல் என்னவென்றால், இரவு தவிர்ந்த ஏனைய நேரங்களில், சுமார் 20 நிமிடம் வரை மைக்ரோ தூக்கம் போடுபவர்களுக்கு அதனால் பாதிப்புகள் ஏதும் இல்லை என்பதே!nap 1

Related posts

உடலில் இப்படி அறிகுறிகளை தென்பட்டால் அலட்சியப்படுத்தாதீர்கள்…!கட்டாயம் இதை படியுங்கள்

nathan

காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவதால் ஏற்படும் பாதகங்கள்

nathan

நிம்மதியான உறக்கம் அளிக்கும் உணவு எது?

nathan

சிறுவனால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் -கலங்க வைக்கும் சம்பவம்!

nathan

ஆண்மைக்குறைவு ஏற்படுமா விதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால்?

nathan

ashwagandha powder benefits in tamil – அஸ்வகந்தா தூளின் முக்கிய நன்மைகள்

nathan

ஏழே நாளில் இதுவரை உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்க செய்ய வேண்டியவைகள்!

nathan

கொசுக்களை விரட்டும் செடிகள்

nathan

இந்த ராசிக்காரங்களாம் கருப்பு கயிற்றை கையில் கட்டக்கூடாது..

nathan