28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1466405314 6212
சைவம்

வேர்க்கடலை புளிக்குழம்பு

தேவையானவை:

வேர்க்கடலை – அரை கப் (ஊற வைத்து, வேக வைக்கவும்),
தேங்காய் துண்டுகள் – 2 அரைக்க
கடுகு, உளுத் தம்பருப்பு, சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
புளிக் கரைசல் – 1 கப்
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

1466405314 6212

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு, அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.

சுவையான சத்துள்ள வேர்க்கடலை குழம்பு ரெடி.

Related posts

பட்டாணி பிரியாணி

nathan

வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு சாதம்

nathan

பொடித்த மிளகு சாதம்

nathan

காலிஃபிளவர் கேரட் புலாவ்

nathan

பட்டாணி குருமா

nathan

சிம்பிளான… உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan

தால் பாதாம் பிர்னி

nathan