31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

குதிரைவாலி அரிசி பிரியாணி

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி அரிசி – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
காலிப்ளவர் (அளவானது) – 1
பச்சை பட்டாணி – அரை கப்
கொழுப்பில்லாத தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
தனியா, சீரகம் எண்ணெயில் வறுத்து பொடித்தது – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 4 கீரியது.

செய்முறை:

• வெங்காயத்தினை பொடியாக நறுக்கவும்.

• காலிப்ளவரை சிறு சிறு துண்டுகளாக்கி நன்கு கழுவி வடிகட்டவும்.

• ஒரு டீஸ்பூன் எண்ணெயை கடாயில் ஊற்றி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், காலிப்ளவர், பட்டாணி சேர்த்து வதக்கவும்.

• இதில் கரம் மசாலா, உப்பு சேர்த்து, களைந்த குதிரைவாலி அரிசியை சேர்க்கவும்.

• இரண்டு க்ளாஸ் தண்ணீர், தயிர், தனியா, சீரகப் பொடி சேர்த்து 3-4 விசில் வரும்வரை குக்கரில் வைக்கவும். • பரிமாறும் முன் கொத்தமல்லி தழையை பொடியாய் நறுக்கி தூவவும்.

• சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மதிய உணவு இது.

Related posts

கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan

சிம்பிளான… மோர் குழம்பு

nathan

காலிஃப்ளவர் ரைஸ்

nathan

புத்தம் புது ‘பூ’ – தாமரைப் பூ கூட்டு

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan

காரசாரமான கோவைக்காய் வறுவல் செய்வது எப்படி

nathan

சூப்பரான கொண்டைக்கடலை குருமா

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… பீர்க்கங்காய் பொரியல்

nathan

புளியோதரை

nathan