வறண்ட சருமமா? எடுங்கள் கைப்பிடி அளவிலான சோடா உப்பினை:
உங்கள் சருமம் வறண்டு பொலிவிழந்து இருக்கிறதா? சோடா உப்பில் நீர் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் பேக் போடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து கழுவினால், முகம் மிருதுவாகி ஜொலிக்கும். சோடா உப்பு முகத்திற்கு மட்டுமல்ல உடலின் எல்லா பாகத்திற்கும் அழகை மேம்படுத்துகிறது.
மென்மையான கூந்தல் பெற:
சிலருக்கு கூந்தல் வறண்டு, கரடுமுரடாக இருக்கும். அவர்களுக்கு சமையல் சோடாதான் பெஸ்ட் சாய்ஸ். கூந்தலில் ஷாம்புவுடன், சிறிது சமையல் சோடாவையும் சேர்த்து அலசுங்கள். கூந்தலுக்கு ஜீவன் தந்து, மிருதுவாக்கும்.
பாதங்களை அழகாக்க:-
சமையல் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கரைத்து சில சொட்டுக்கள் தேங்காய் எண்ணைய் கலந்து அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊற வையுங்கள். பாதங்களிலிருக்கும், அழுக்கை வெளியேற்றி, இறந்த செல்களை அகற்றி புதிதாய் பளிச்சிட வைக்கும்.
வீட்டிலேயே ஸ்பா வேண்டுமா?
சோடா உப்புடன், ஏதாவது 10-15 துளிகள் எண்ணை கலந்து கப் கேக் உறையில் ஒரு ஸ்கூப் அளவில் போட்டு ஒரு இரவு முழுவதும் வைக்க வேண்டும், மறு நாள் கெட்டிப்பட்டிருக்கும். அதனை பாத் டப்பில் ஷவர் வரும் பகுதியில் போடவும், வெதுவெதுப்பான நீரில் சோடா உப்பு கரைய,எண்ணை பிரிந்து குளிக்கையில் ஸ்பா உணர்வு கிடைக்கும்.