26 1435303423 8dependonfruits
ஆரோக்கிய உணவு

தினமும் காலையில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பழங்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த பழங்களை காலை வேளையில் சாப்பிட்டு வருவதன் மூலம் இன்னும் பல நன்மைகளைப் பெறலாம் என்பது தெரியுமா?

ஆம், பழங்களை சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை வேளை என்று நிபுணர்களும் கூறுகின்றனர். மேலும் அப்படி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்றும் கூறியுள்ளனர். அதில் முக்கியமாக உடல் எடையைக் குறைக்க முயல்வோர், காலை வேளையில் தவறாமல் ஒரு பழத்தையாவது சாப்பிட்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

ஏனெனில் அந்த அளவில் ஒவ்வொரு பழத்திலும் கொழுப்புக்களைக் கரைக்கும் நொதிகள் அதிகம் உள்ளது. சரி, இப்போது தினமும் காலை வேளையில் பழங்களை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆற்றலை அதிகரிக்கும் பழங்கள்

உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும். அதிலும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், பெர்ரிப் பழங்கள் மற்றும் தர்பூசணி போன்றவை மிகவும் சிறப்பான காலை உணவுகள். மேலும் இவைகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாகவும், கார்போஹைட்ரேட் அதிகமாகவும் இருப்பதால், காலை வேளையில் சாப்பிடுவதற்கு இப்பழங்கள் மிகவும் சிறந்தவை.

செரிமானத்திற்கு நல்லது

பழங்கள் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். அதிலும் அதனை காலையில் சாப்பிட்டால், உடலில் சேர்ந்த டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, செரிமானம் மேம்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கான ஆற்றலும் கிடைக்கும்.

நொதிகள் நிறைந்தது

காலையில் பழங்களை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைப்பதற்கு மற்றொரு காரணம், இவற்றில் நொதிகள் அதிகம் நிறைந்துள்ளது. நொதிகளானது உடலின் பல்வேறு இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதவை. மேலும் நொதிகள் தான் சத்துக்கள் உடல் உறிஞ்சுவதற்கு உதவிபுரிகின்றன.

மனநிலையை மேம்படுத்தும்

காலை வேளையில் பழங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம், அதில் உள்ள இயற்கையான குளுக்கோஸ் மற்றும் நார்ச்சத்து, மன நிலையை மேம்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வழிவகுக்கும். எனவே காலையில் பழங்களை உட்கொண்டால், மன அழுத்தம் மட்டுமின்றி, உடலில் ஏற்பட்ட அழுத்தமும் நீங்கி, ரிலாக்ஸாக இருக்க உதவி புரியும்.

உடல் வறட்சியைத் தடுக்கும்

பழங்களில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் உடல் வறட்சியைத் த டுக்கலாம். அதிலும் காலையில் தண்ணீர் அதிகம் குடிக்க பிடிக்காதவர்கள், பழங்களை காலை வேளையில் அதிகம் சாப்பிடலாம்.

இனிப்பு பண்டங்களின் ஆர்வத்தைக் குறைக்கும்

பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை, இனிப்புப் பொருட்களின் மீதுள்ள அதிகப்படியான ஆர்வத்தைக் குறைக்கும். அதிலும் காலையில் இதனை உட்கொண்டால், இனிப்புக் பொருட்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தாமல் தடுக்கும்.

எடையைக் குறைக்கும்

பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான நன்மைகளுள் ஒன்று எடை குறையும் என்பது தான். இதற்கு காரணம் அதில் உள்ள இயற்கை சர்க்கரை, குறைவான கலோரி போன்றவை மட்டுமின்றி, உடலின் ஆற்றலை நீண்ட நேரம் நிலைத்திருக்க உதவும்.
26 1435303423 8dependonfruits

Related posts

கர்ப்ப காலத்தில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிறந்த சிகிச்சை

nathan

உணவுகளின் மூலம் வரும் கொழுப்புச் சத்தை உடல் உறுஞ்சுதலைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

பூவன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

nathan

மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும் உணவுகள்!!!

nathan

சுவையான சிக்கன் மசாலா ரைஸ்

nathan

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சை பழம் சாப்பிடலாம்?

nathan

சாதம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த நேரத்தில் கிரீன் டீ குடிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்தும்!

nathan

ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு செய்ய…!

nathan