32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
N2U1An8
சரும பராமரிப்பு

வெயிலில் விளையாடுவதால் சருமம் கருப்பாகுமா?skin care tips

வெயிலில் விளையாடும் குழந்தைகளின் சருமம் கருக்குமா? அதற்காக அவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டுமா?

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது அவசியம். அப்போதுதான் வைட்டமின் டி குறைபாடு வராமல் இருக்கும். காலை வெயிலும் மாலை வெயிலும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே ஏற்றவை. 12 மணி முதல் 3 மணி வரையிலான வெயிலைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.பள்ளிக்கூடங்களில் இந்த 12- 3 மணி நேரத்தில் விளையாட்டு பீரியட் இருந்தால் அப்போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கச் சொல்லி குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பலாம்.

வெயிலில் செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக இதைத் தடவிக் கொள்ள வேண்டும். சில முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் குழந்தைகளுக்கான பிரத்யேக சன் ஸ்கிரீன் கிடைக்கிறது. கடைகளில் நீங்களாகவே சன் ஸ்கிரீன் வாங்கிக் குழந்தைகளுக்கு உபயோகிக்காதீர்கள். அதில் இருக்கும் கெமிக்கல் அவர்களது சருமத்துக்குப் பாதுகாப்பானதா எனத் தெரியாது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உபயோகிக்கவும்.

இது தவிர தலைக்குத் தொப்பி, முழுக்கை சட்டை போன்றவற்றையும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தலாம். வாய்வழியாக எடுத்துக் கொள்கிற சன் ஸ்கிரீன் இன்னும் சிறந்தது. வாய்வழி சன் ஸ்கிரீன் என நான் குறிப்பிடுவது ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள். குறிப்பாக ஆரஞ்சு நிறத்தில் உள்ள அனைத்தும். பப்பாளி, ஆரஞ்சு, கேரட், பரங்கிக்காய், தக்காளி போன்ற அனைத்தும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் சூரியனின் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

நெல்லிக்காய், சாத்துக்குடி, பிரக்கோலி, கீரை போன்றவையும் இதே போன்று உதவும். இவை தவிர சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.வெயிலில் விளையாடி விட்டு வந்ததும் குழந்தைகளை உடலில் அழுக்கும் வியர்வையும் நீங்கக் குளிக்கச் செய்ய வேண்டும். உடலில் வியர்வை தங்கினால் ஃபங்கல் இன்ஃபெக் ஷன் வரும். அதன் மூலம் தேமல், படர்தாமரை போன்றவை வரலாம். குளித்ததும் உள்ளாடை முதல் உடை வரை எல்லாவற்றையும் மாற்றச் சொல்ல வேண்டியதும் அவசியம்.N2U1An8

Related posts

இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் காணாமல் போகும் தெரியுமா?இதை முயன்று பாருங்கள்

nathan

சன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

nathan

முகத்திற்கும் மட்டுமல்ல உடலுக்கும் ஸ்கரப்

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும தளர்ச்சி நீக்க இதை வாரத்தில் இரண்டு நாள்கள் செய்தல் போதும்.!

nathan

சருமத்தை சுத்தமாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்

nathan

தெரிஞ்சிக்கங்க… முதுமைத் தோற்றத்தைப் பெற வழிவகுக்கும் ஆபத்தான உணவுகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா உச்சி முதல் பாதம் வரை அழகாக்க இந்த ஒரே பூ போதும்!

nathan

அழகை கெடுக்கும் தோல் சுருக்கம்

nathan

கோடைகாலத்தில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஃபேஸ் பேக்குகள்

nathan