30.3 C
Chennai
Tuesday, May 21, 2024
16 suntan
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வீட்டிலேயே சரும கருமையைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

கோடைக்காலத்தில் சாதாரணமாக காணப்படும் பிரச்சனை தான் சன்டான் எனப்படும் சரும நிற மாற்றம். எனினும், கோடைக்காலத்தில் மட்டும் தான் சருமத்தின் நிறம் மாறுபடும் என்று சொல்ல முடியாது. மழைக்காலத்திலும் கூட இந்த மாற்றங்கள் வரலாம்.

நம்மில் பலரும் இந்த சரும நிற மாற்றங்களை சரி செய்யும் நோக்கில் விலை அதிகமான இரசாயனம் கலந்த க்ரீம்கள் மற்றும் லோஷன்களை வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம்.

இப்படி விலை அதிகமான காஸ்மெடிக் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயெ செய்யப்பட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு சரும நிற மாற்றத்தினை போக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? இந்த டிப்ஸ்கள் இயற்கையானவை மற்றும் தோலில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை என்று நாங்கள் உறுதியாகச் சொல்ல முடியும்.

இந்த ஹோம்லி டிப்ஸ்களை பயன்படுத்தி சூரியக்கதிர்களால் மாறுபடும் சரும நிறத்திற்கு டாடா காட்டுங்கள்.

எலுமிச்சை ஃபேஸ் பேக்

எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை கலந்து தயார் செய்து பூசும் கலவை முகத்தில் அற்புதங்களை செய்யும். எலுமிச்சை சாறு சரும கருமையை ஆற்றவும், வெள்ளரி மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவை குளுமைப்படுத்தவும் உதவுகின்றன.

பால் மாஸ்க்

காய்ச்சாத பால், புளி மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்த கலவையை முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி விட்டு, காய வையுங்கள். சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள்.

ஓட்ஸ் பேக்

ஓட்ஸ் மற்றும் மோர் ஆகியவற்றை கலக்கி, முகத்தில் பூசிக் கொண்டால் இறந்த தோல் பகுதிகளை நீக்கி விட முடியும்.

கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்

கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாற்றுடன், சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், சருமத்தில் உள்ள கருமையை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை பழத்தில் இருந்து பிழிந்த சாற்றை எடுத்து முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் வீங்கியுள்ள பகுதிகளிலும் தடவுங்கள். இந்த சாற்றை 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து சரும கருமையை விரட்டுங்கள்.

இளநீர்

இளநீரை தொடர்ந்து கைகள் மற்றும் முகத்தில் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமையை மிகவும் நேர்த்தியாக சரிசெய்ய முடியும். அது மட்டுமல்லாமல், சருமத்தை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் பராமரிக்க உதவும்.

மஞ்சள் பொடி

மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சை சாற்றை வாரத்திற்கு மூன்று முறை தடவிக் கொள்ளுங்கள். இது சருமத்தின் நிறத்தை வெளுக்கச் செய்யும்.

பாதாம்

பாதாம்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் நன்றாக அரைக்கவும். அத்துடன் பால் க்ரீமை சேர்த்து, பேஸ்ட் போல தயாரித்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள்.

தக்காளி

தக்காளி சாறு, ஓட்மீல், தயிர் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளுமையான தண்ணீ

பப்பாளி

பப்பாளியை அரைத்து கூழாக்கி, கருமையாக உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். தோலுக்கு மிகவும் ஏற்ற பப்பாளியில், மூப்படைவதை தள்ளிப் போடும் குணங்கள் உள்ளன.

Related posts

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்(Video)?

nathan

பால் ஆடை

nathan

கருமையான சருமத்தை வெண்மையாக்க சில அட்டகாசமான வழிகள்!!!

nathan

டாட்டூ: ஆபத்தை சுமந்து வரும் அழகு

nathan

உங்களுக்கு தெரியுமா எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்!!

nathan

தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வேப்ப எண்ணெய்

nathan

வெள்ளையாவதற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் எனத் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சருமத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு குளிப்பது எப்படி?

nathan

அழகுக்கு தடைபோடும் அலர்ஜி

nathan