27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201606101415057602 Tasty Punjabi egg masala SECVPF
அசைவ வகைகள்

சுவையான பஞ்சாபி முட்டை மசாலா

முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. அந்த வகையில் பஞ்சாபி முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான பஞ்சாபி முட்டை மசாலா
தேவையான பொருட்கள் :

முட்டை – 5
வெங்காயம் – 2
பிரியாணி இலை – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை – 1 டேபிள் ஸ்பூன் (கையால் பொடி செய்தது)
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்

மசாலா பேஸ்ட்டிற்கு :

வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 5 பற்கள்
கிராம்பு – 2
பட்டை – 1
சோம்பு – 1 டீஸ்பூன்
தக்காளி – 2

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காய்ந்த வெந்தயக்கீரையை கைகளால் பொடித்து வைக்கவும்.

* முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து தனியாக வைக்கவும்.

* மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மாங்காய் தூள், தக்காளி சாறு சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து, 6 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் உப்பு, கரம் மசாலா சேர்த்து 4 நிமிடம் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி போட்டு, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* கடைசியாக காய்ந்த வெந்தய இலையை தூவி இறக்கினால், சுவையான பஞ்சாபி முட்டை மசாலா ரெடி!!!201606101415057602 Tasty Punjabi egg masala SECVPF

Related posts

ஆந்திரா சிக்கன் குழம்பு

nathan

குளிர் க்ளைமேட்டுக்கு… சுவைகூட்டும் சிக்கன் பெப்பர் ஃப்ரை!

nathan

காரசாரமான ஆட்டு மூளை மசாலா

nathan

கோவா க்ரீன் சிக்கன் குழம்பு

nathan

வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆட்டுக்குடல் குழம்பு

nathan

வறுத்தரைச்ச மட்டன் குழம்பு செய்வது எப்படி

nathan

சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan

வான்கோழி குழம்பு

nathan

இறால் வறுவல்: செய்முறைகளுடன்…!

nathan