05 1433490391 1 aloostuffedcapsicum
சிற்றுண்டி வகைகள்

சுவையான… ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

உருளைக்கிழங்கு பிரியர்கள் அதிகம் உள்ளனர். அப்படி உருளைக்கிழங்கு பிடித்தவர்கள், அந்த உருளைக்கிழங்கை பலவாறு சமைத்து ருசிக்க நினைப்பார்கள். அதில் பலரும் விரும்பி சாப்பிடுவது, உருளைக்கிழங்கு ப்ரை, உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு மசாலா போன்றவை.

அதேப்போன்று சிலருக்கு குடைமிளகாயும் ரொம்ப பிடிக்கும். பொதுவாக இந்த குடைமிளகாயை ப்ரைடு ரைஸில் தான் பலரும் சுவைத்திருப்பார்கள். இல்லாவிட்டால், பொரியல் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் இந்த குடைமிளகாயையும், உருளைக்கிழங்கையும் கொண்டு அற்புதமான ரெசிபி ஒன்றை செய்யலாம்.

அது தான் ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: குடைமிளகாய் – 5 (உள்ளே உள்ள விதைகளை நீக்கியது) உருளைக்கிழங்கு – 5 (வேக வைத்து தோலுரித்தது) பச்சை பட்டாணி – 1 கப் (வேக வைத்தது) எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது) சீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை: 1

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
05 1433490391 1 aloostuffedcapsicum

செய்முறை: 2

பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
05 1433490398 2 aloostuffedcapsicum

செய்முறை: 3

பின் பச்சை மிளகாய் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.
05 1433490405 3 aloostuffedcapsicum

செய்முறை: 4

அடுத்து அதில் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.
05 1433490411 4 aloostuffedcapsicum

செய்முறை: 5

பின்பு பட்டாணியை சேர்த்து நன்கு, பச்சை வாசனை போக கிளறி விட்டு இறக்க வேண்டும்.
05 1433490417 5 aloostuffedcapsicum

செய்முறை: 6

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
05 1433490603 aloostuffedcapsicum

அதற்குள் குடைமிளகாய்களில் உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
05 1433490424 6 aloostuffedcapsicum

செய்முறை: 8

எண்ணெயானது சூடானதும், தீயை குறைத்து வாணலியில் குடைமிளகாய்களைப் போட்டு, மூடி வைத்து 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
05 1433490431 7 aloostuffedcapsicum
செய்முறை: 9

பின் மூடியை திறந்து, குடைமிளகாயை திருப்பி போட்டு, மீண்டும் மூடி வைத்து 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
05 1433490437 8 aloostuffedcapsicum

செய்முறை: 10

இதேப்போன்று குடைமிளகாய் நன்கு வேகும் வரை திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும்.
05 1433490443 10 aloostuffedcapsicum

செய்முறை: 11

குடைமிளகாய் நன்கு வெந்த பின்னர், அதனை இறக்கி பரிமாறினால், சுவையான ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம் ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/veg/delicious-aloo-stuffed-capsicum-recipe-step-step-008428.html#slide45975

Related posts

முட்டை – சப்பாத்தி ரோல்

nathan

பிரட் ஆனியன் பொடிமாஸ்

nathan

கோதுமை தேங்காய்ப்பால் பிரதமன்

nathan

மு‌ட்டை க‌ட்லெ‌ட்

nathan

ஸ்நாக்ஸ்: சூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

தித்திப்பான தேங்காய் லட்டு செய்முறை விளக்கம்

nathan

சுவையான ரவா வடை

nathan

கேபேஜ்(கோஸ்) பன்னீர் ரோல் செய்ய…

nathan

பிரெட் பீட்சா

nathan