30.8 C
Chennai
Monday, Nov 18, 2024
அலங்காரம்மேக்கப்

மழைக்காலத்தில் மேக்அப் போடுவதெப்படி?

ld673நன்றாக மேக்அப் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், பலருக்கு எவ்வாறு அதை முறையாக செய்வது, மேக்அப் வெகுநேரம் கலையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிவதில்லை. மேக்அப் செய்து கொள்வது பற்றிய சில டிப்ஸ் இதோ உங்களுக்காக

முகத்திற்கான மேக்அப்:

முகத்தை பேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து, முகத்தில், 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இது முகத்தில், அதிகமாக வியர்ப்பதை குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்அப் கலையாமல், பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.

மழைக்காலத்தில், உதட்டை அலங்கரிக்க, மேட்டி லிப்ஸ்டிக் தான் சிறந்தது. லைட் ஷேட், லிப் லைனர்கள் மற்றும் லிப்ஸ்டிக்கள் பயன்படுத்தலாம். இந்த காலத்தில் மாய்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றை தவிர்க்க உதவும்.

கூந்தல் பராமரிப்பு:

மழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். கூந்தலில் ஏற்படும், அதிகப்படியான ஈரப்பதம், வியர்வை மற்றும் மழையில் நனைதல் போன்றவற்றால், அவை வலுவற்று காணப்படுகிறது. கூந்தல் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளுதல் மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவை மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள். இறுக்கமான பேன்டுகள், தலையை ப்ரீஹேர் விடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மழைக்காலத்திற்கு ஏற்ற உடைகள்:

மழைக்காலத்தில், கிரிஸ்ப், காட்டன் மற்றும் பட்டு உடைகள் அணிவதை முடிந்த வரைத் தவிர்க்கவேண்டும். சிந்தடிக் உடைகளே ஏற்றது. இவை, விரைவாக உலர்வதோடு, காய்ந்த பின்னும், அதன் ஒரிஜினல் நிறம் அப்படியே நீடிக்கிறது. மழைக்காலத்தில், சாலைகளில் சேறு இருக்கும் என்பதால், வெள்ளை மற்றும் லைட் கலர் உடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும். நீலம், ரிச் கிரீன், அடர் ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் உடையணியலாம். மேக்அப்பிற்கு ஏற்றவாறு உடை அணியலாம்.

Related posts

பொட்டு!!

nathan

பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். ….

sangika

கண்கள் மிளிர…

nathan

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – உங்களுக்கும் தெரியாத சில குறிப்புகள்

nathan

குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?

nathan

டீன்ஏஜ் பெண்களின் அழகுக் கவலை

nathan

கண்களை அலங்கரியுங்கள்

nathan

நீள்வட்ட முகத்திற்கான அருமையான சில மேக்கப் டிப்ஸ்!!

nathan

பல்வேறு வகையான யடணாகம்

nathan