29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
24 1435138548 5 aloevera
ஆரோக்கியம் குறிப்புகள்

இரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்!!!

வீட்டுத் தாவரங்கள் உங்கள் வீட்டிலுள்ள காற்றை தூய்மைப்படுத்தி, ஆக்சிஜெனை வழங்கும். மேலும் உங்கள் வீட்டிற்கு அவைகள் வண்ணம் சேர்க்கும் வகையிலும், உயிரோட்டத்தையும் அளிக்கும். அதனால் நம் படுக்கையறைக்கு நாம் தேர்வு செய்யும் சரியான செடிகள் உங்களை ஆசுவாசப்படுத்தி ஒரு அருமையான இரவை அமைத்துக் கொடுக்கும்.

இவ்வகை செடிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க மிகப்பெரிய பட்டியலே உள்ளது. அவற்றில் பல வகை செடிகள் பொதுவாக புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. இதனை படிப்பதன் மூலம் அவ்வகை செடிகளில் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அவற்றை உங்கள் வீட்டிற்கும், படுக்கையறைக்கும் கொண்டு வாருங்கள்.

இங்கு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், நன்றாக தூக்கம் வருவதை உறுதி செய்யவும் உதவியாக விளங்கும் 5 செடிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

மல்லிகை (Jasmine)

வீலிங் ஜெஸ்யுட் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் மல்லிகை இயற்கையாக உறக்கத்தை ஏற்படுத்த உதவும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. தரமான தூக்கம், குறையும் பதற்றம் மற்றும் விழிக்கும் போது மேம்பட்ட மனநிலை போன்ற நேர்மறையான தாக்கங்களை இது ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஜாஸ்மினம் பாலியாந்தம் என்ற வகை எப்போதும் மலராது. ஆனால் மற்ற தாவரங்களுடன் ஒப்பிடும் போது இதனை பராமரிப்பது சுலபமாகும். மேலும் இதன் வாசனையும் கூட அற்புதமாக இருக்கும்.

லாவெண்டர் (Lavender)

பல விஷயங்களுக்கு மனிதன் பயன்படுத்தும் பொதுவான இயற்கை சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது லாவெண்டர். சோப்புகள், ஆடைகள், ஷாம்பு போன்ற பலவற்றில் வாசனையை ஏற்படுத்த இது பயன்படுத்தப்படுகின்றது. மிகச்சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாகவும் இது செயல்படுகிறது. ஆனால் அதன் சக்தி இதோடு நின்று விடுவதில்லை. தூக்கமின்மை மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தவும் கூட லாவெண்டர் செடி உதவுகிறது. இந்த வாசனையை நுகரும் போது இதமாக இருக்கும் என்றும், இதன் வாசனையை சுவாசிக்கும் போது நரம்புகளுக்கு அமைதியூட்டும் மருந்தாகவும் அமையும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கார்டனியா (Gardenia)

கேப் மல்லிகை என அழைக்கப்படும் கார்டனியா ஜாஸ்மினாய்ட்ஸ் தூக்கத்தை தூண்டும் வல்லமையை கொண்டுள்ளதால் இவற்றை தூக்க மாத்திரைகளாக பரிந்துரைக்கின்றனர். எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில், காபா என்றொரு நரம்பணு மீதான வேலியத்தின் அதே தாக்கங்களை இந்த மலர்கள் கொண்டுள்ளது என்பது ஜெர்மானிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. மிக தூய்மையான வாசனையுடன் கூண்டில் வைக்கப்பட்ட அந்த எலிகள் அதிக முனைப்புடன் இல்லாமல், ஒரு மூலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இதே விளைவுகளை மனிதர்களின் மீதும் இது ஏற்படுத்துகிறது. உங்களையும் கனவு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வல்லமையை இது கொண்டுள்ளது.

பாம்பு தாவரம் (Snake plant)

மாமியாரின் நாக்கு என அருமையான செல்லப்பெயரை கொண்டுள்ள இந்த செடி, வீட்டிலுள்ள ஆக்சிஜென் தூய்மையை மேம்படுத்த சிறந்த வழியாக பரிந்துரைக்கப்படுகிறது. படுக்கை அறையில் இதனை வைப்பதற்கு குறைந்த பராமரிப்பும் குறைந்த செலவே ஆகிறது. நாசா நடத்திய ஆய்வில் காற்றை சுத்தப்படுத்தும் 12 தாவரங்களில் இதையும் ஒன்றாக இணைத்துள்ளது. அறிவியல் அனைத்தையும் வென்று விடும்; நாசாவின் பரிந்துரைப்படி இந்த பட்டியலில் நாம் இதனை சேர்க்க வேண்டும்.

கற்றாழை (Aloe Vera)

அழற்சி, தழும்புகள் மற்றும் எரிந்த சருமம் போன்றவைகளுக்கு இதமளிக்க மற்றொரு இயற்கை மருந்தாக இது செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்கும். அது மட்டுமல்லாது சுத்தப்படுத்தும் பொருட்களில் உள்ள மாசுப்படுத்தும் ரசாயனங்களை இது நீக்கும். அதனால் படுக்கையறை மற்றும் வீட்டின் பிற பகுதிகளில் காற்றை தூய்மைப்படுத்தும். உங்கள் வீட்டில் தீமையான ரசாயனங்கள் அதிகளவில் இருந்தால் இந்த செடியில் பழுப்பு நிற திட்டுக்களை காணலாம். மேலும் இது உங்களுக்கு நிலைமையை தெளிவாக்கும்.
24 1435138548 5 aloevera

Related posts

கருப்பையை எப்படி பாதுகாப்பது

nathan

உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிந்து கொள்ள…

nathan

டயட்டில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க… பெண்களின் கருப்பையில் ஒளிந்திருக்கும் அதிசயங்கள் மற்றும் மர்மங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா மூல நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள!

nathan

இத படிங்க இரத்த அழுத்தத்தை குறைக்கும் கொத்தமல்லி!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க ராசியின் செக்ஸியான விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்கனுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் என்ன நன்மைகள்…?

nathan

ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறாங்க. பிரச்னையே இல்லைன்னா இந்நேரம் குழந்தை பிறந்திருக்கணும்தானே?

nathan