சத்தான முளைகட்டிய நவதானிய சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான முளைகட்டிய நவதானிய சுண்டல்
தேவையான பொருட்கள் :
வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி (அனைத்தும் முளைகட்டியது) – தலா 4 டேபிள்ஸ்பூன் அல்லது சமஅளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
பெருங்காயத்தூள்
அரைக்க:
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
இஞ்சி – சிறிய துண்டு.
சோம்பு – கால் டீஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
செய்முறை:
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
* முளைகட்டிய தானியங்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் போட்டு 5 விசில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
* அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.
* வேகவைத்த தானியம், அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.
* பச்சை வாசனை போனதும், (விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான நவதானிய சுண்டல் ரெடி.