44072830 chennai 02
Other News

திருமாவளவன் பரபரப்பு பேச்சு: இந்து மதம் என்ற ஒன்றே இல்லை

2025ம் ஆண்டிற்கான விசிக விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்துகிறோம்: சனாதன சக்திகள் தமிழ்நாடு மண்ணை நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா?, விடுதலை சிறுத்தைகளா? என்பதுதான் தமிழ்நாட்டு பாலிடிக்ஸ். தமிழ்நாட்டு அரசியலை மதவாத அரசியலை நோக்கி மடைமாற்றம் செய்ய பலர் முயற்சிக்கின்றனர்.

மதச்சார்பின்மைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பாஜக செயல்படுவதால் அது கூர்மைப்படுகிறது. மதச்சார்பின்மை கூர்மைப்படக் காரணமான ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு நன்றி. தேர்தல் கட்சி என்ற வகையில் பாஜகவை எதிர்க்கவில்லை; அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம்.

 

நாட்டில் அமையும் அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும்; பாஜகவோ அரசமைப்பை எறிய நினைக்கிறது. நாம் கொடியேற்ற, பேனர் கட்ட, பொதுக்கூட்டங்களை நடத்த போராட வேண்டியுள்ளது எங்கள் இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல; ஒருநாள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றுகூட நான் அறிவித்துவிடுவேன். இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை; பிளாஸ்டிக் சேர், தரையில் கூட அமருவேன்.

இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்து மதம் வந்தது; பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது; இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது; அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு.

திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா?. புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை. என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

3 நாளில் ஜவான் பாக்ஸ் ஆபிஸ் சுனாமி! 1000கோடி எட்ட வாய்ப்பு

nathan

நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 5 ஆவது நாடானது ஜப்பான்

nathan

nathan

வகுப்பில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள்: வீடியோ

nathan

நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்!

nathan

ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு மாமியார் விளக்கம்

nathan

பல் ஈறு வளர்ச்சி பெற

nathan

சிங்கப்பூர் நாட்டிற்கு தேனிலவு சென்ற சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன்

nathan

மஹாலக்ஷ்மியின் கணவருமான ரவீந்தர் கைது. பின்னணி என்ன ?

nathan