31.2 C
Chennai
Saturday, Jun 29, 2024
c83gaTE
சூப் வகைகள்

காளான் சூப்

என்னென்ன தேவை?

காளான் – 2 கப்,
தக்காளி – 1,
வெங்காயம் – 1,
இஞ்சி – சிறிது,
பூண்டு – 3 பல்,
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்,
சீரகத்தூள் – கால் ஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2,
சோள மாவு – அரை ஸ்பூன்,
கறிவேப்பில்லை – சிறிது,
கொத்தமல்லி – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

காளானை சுடுதண்ணீரில் போட்டு நன்கு அலசி விட்டு சிறியதாக கட் பண்ணவும். சோளமாவை கட்டி இல்லாமல் அரை கப்தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக கட் பண்ணவும்.இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக கிறீக் கொள்ளவும். கறிவேப்பில்லை, கொத்தமல்லியை சிறியதாக கட் பண்ணவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரிசி கழுவிய நீரை ஊற்றி கொதிக்க விட்டு வெங்காயம்,தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விட்டு காளானை போடவும். காளான் வெந்ததும் சோளமாவு கரைசலை ஊற்றி உப்பு போட்டுகொதிக்க விட்டு மிளகு, சீரகத்தூள் போடவும். கொத்தமல்லி, கறிவேப்பில்லை தூவி பறிமாறவும்.c83gaTE

Related posts

தக்காளி – ஆரஞ்சு சூப்

nathan

சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்

nathan

காய்கறி சூப்

nathan

உடல் ஆரோக்கியத்தை காக்க சூப் குடிங்க

nathan

மட்டன் எலும்பு சூப்

nathan

சுவையான சிக்கன் சூப்

nathan

சோயா கிரானுல்ஸ் – தக்காளி சூப்

nathan

பாதாம் தேங்காய்ப்பால் கிரீம் சூப்

nathan

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி ??

nathan