27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
chettinadnethilikaruvadukuzhamburecipe 12 1463039689
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு

உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? அதிலும் கருவாட்டை குழம்பு செய்து சாப்பிட பிடிக்குமா? அப்படியெனில் நம்ம செட்டிநாடு ஸ்டைல் நெத்திலி கருவாட்டு குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள். இது செய்வது மிகவும் சுலபம் மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும்.

சரி, இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைல் நெத்திலி கருவாட்டு குழம்பின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து முயற்சித்து, சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

நெத்திலி கருவாடு – 40-50 கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது சின்ன வெங்காயம் – 15-20 (தோலுரித்தது) தக்காளி – 2 (நறுக்கியது) மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் புளிச்சாறு – 3 டேபிள் ஸ்பூன் மாங்காய் – 1 (நீளமாக நறுக்கியது) உப்பு – தேவையான அளவு சர்க்கரை – 1 டீஸ்பூன் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் நெத்திலி கருவாடை சுடுநீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி அதன் தலையை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் மாங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாங்காய் பாதியாக வெந்ததும், உப்பு, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குழம்பை நன்கு கொதிக்க விட வேண்டும். பின் கருவாட்டை சேர்த்து 5-10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி!!!

chettinadnethilikaruvadukuzhamburecipe 12 1463039689

Related posts

சுவையான செட்டிநாடு பூண்டு ரசம்

nathan

செட்டிநாடு உப்பு கறி

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா

nathan

செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி

nathan

சூப்பரான செட்டிநாடு தக்காளி குழம்பு

nathan

செட்டிநாடு உப்பு கறி செய்முறை விளக்கம் chettinad samayal kurippu

nathan

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்

nathan

செட்டிநாடு சிக்கன் கிரேவி

nathan

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

nathan