28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
201605110647467688 how to make mango halwa SECVPF
இனிப்பு வகைகள்

இனிப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி

கோடை காலத்தில் மலிவான விலையில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து இனிப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இனிப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மாம்பழ கூழ் – 2 கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – அரை கப்
சோள மாவு – 1 ஸ்பூன்
பாதாம், முந்திரி – தேவைக்கு
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை :

* பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கப் நெய் ஊற்றி மாம்பழ விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும்.

* மாம்பழ கலவை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சோள மாவு கரைசலை ஊற்றி நன்றாக கைவிடாமல் கிளறவும்.

* இடையிடையே 5 நிமிடத்திற்கு ஒருமுறை 1 ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளறிகொண்டே இருக்க வேண்டும்.

* அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.

* சர்க்கரை நன்றாக கரைந்து ஓரங்களில் நெய் வர ஆரம்பித்தவும் அல்வா பதம் வந்ததாக அர்த்தம்.

* இப்போது நறுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரிஏலக்காய் தூளை போட்டு கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி 2 மணி நேரம் கழித்து துண்டுகளாக போட்டு பரிமாறவும்.

* சுவையான இனிப்பான மாம்பழ அல்வா ரெடி.201605110647467688 how to make mango halwa SECVPF

Related posts

கோதுமை ரவா கேசரி

nathan

சூப்பரான தீபாவளி ஸ்பெஷல் லட்டு செய்ய…!!

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பால் ரவா கேசரி

nathan

ரவா லட்டு

nathan

வீட்ல விசேஷமா? இந்த பிஸ்கட் லட்டு செஞ்சு பாருங்க!! ஈஸி ரெசிபி

nathan

தீபாவளிக்கு சுவையான வேர்க்கடலை கட்லி

nathan

காரட்அல்வா /Carrot Halwa

nathan

பாலக்கீரை குழிப்பணியாரம் செய்வது எப்படி

nathan

வேர்க்கடலை பர்ஃபி : செய்முறைகளுடன்…!

nathan