31.1 C
Chennai
Monday, May 20, 2024
paneer gravy
Other News

மூலிகை பன்னீர் கிரேவி

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* நெய் – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 3 (நறுக்கியது)

* இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

* பூண்டு – 6 பல் (நறுக்கியது)

* கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது)

* புதினா – 1 கப் (நறுக்கியது)paneer gravy

செய்முறை:

* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

Herb Paneer Gravy Recipe In Tamil
* பிறகு அதில் தேவையான நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து கிரேவியில் ஊற்றி கிளறினால், மூலிகை பன்னீர் கிரேவி தயார்.

Related posts

முன்னணி நடிகை தேவயானி குடும்ப புகைப்படங்கள் இதோ

nathan

விஜய் வசந்த் திருமண புகைப்படங்கள்

nathan

என்ன இது? 30 வயதாகியும் கல்யாணம்மாகாமல் தனிமையில் சிற்றித்திரியும் முன்னணி நடிகைகள் இவ்வளவு பேரா?..

nathan

1,700 அறைகள் கொண்ட அரண்மனை 5,000 சொகுசு கார்கள்,

nathan

நடிகர்களுடன் அந்த விளையாட்டில் DD!வீடியோ

nathan

காதலனை கரம்பிடித்தார் அமலாபால்..புகைப்படங்கள்

nathan

ஜிம்மில் முகாம் போட்ட இருக்கும் ரோபோ சங்கர் – இதான் காரணமா ?

nathan

சிம்பு தரப்பு மறுப்பு! – இலங்கை பெண்ணுடன் திருமணமா?

nathan

ஸ்விகி’ -யின் முதல் திருநங்கை நிர்வாகி சம்யுக்தா விஜயன்!வெற்றிக்கான பாதையின் ஆரம்பம்

nathan