paneer gravy
Other News

மூலிகை பன்னீர் கிரேவி

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* நெய் – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 3 (நறுக்கியது)

* இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

* பூண்டு – 6 பல் (நறுக்கியது)

* கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது)

* புதினா – 1 கப் (நறுக்கியது)paneer gravy

செய்முறை:

* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

Herb Paneer Gravy Recipe In Tamil
* பிறகு அதில் தேவையான நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து கிரேவியில் ஊற்றி கிளறினால், மூலிகை பன்னீர் கிரேவி தயார்.

Related posts

மனைவி வேண்டுமா? தவணையை செலுத்திவிட்டு கூட்டீட்டு போ

nathan

Candle Light Dinner-ஐ என்ஜாய் செய்யும் லப்பர் பந்து நாயகி ஸ்வாசிகா

nathan

நடிகர் மாதவன் குடும்பத்துடன் நடிகை நயன்தாரா

nathan

விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்

nathan

தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கணவனைக் கொ-ன்-ற மனைவி

nathan

நீச்சல் உடையில் பார்வதி நாயர் படுகிளாமர்

nathan

இறுக்கமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

nathan

45 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசை பட்ட பிரேம்ஜி!

nathan

கிளாமரில் புகுந்து விளையாடும் குஷ்புவின் மகள்

nathan