சமையல் குறிப்புகள்

சுவையான முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு பொரியல்

தேவையான பொருட்கள்:

* முட்டைக்கோஸ் – 1 கப் (நறுக்கியது)

* பாசிப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2

* உப்பு – சுவைக்கேற்ப

* துருவிய தேங்காய் – சிறிது

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரில் முட்டைக்கோஸ் மற்றும் பாசிப்பருப்பை போட்டு, சிறிது நீரைத் தெளித்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

Cabbage Moong Dal Poriyal Recipe In Tamil
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டு வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து, அதில் வேக வைத்துள்ள முட்டைக்கோஸ் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு ஒருசேர விட வேண்டும்.

* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு பொரியல் தயார்.

Related posts

புதினா பன்னீர் கிரேவி

nathan

சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன்

nathan

சூப்பரான பேபி கார்ன் மஞ்சூரியன்

nathan

சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி !….

sangika

பட்டாணி கிரேவி

nathan

பீன்ஸ் புளிக்குழம்பு

nathan

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சாம்பார்

nathan

உடுப்பி சாம்பார்

nathan

சுவையான தயிர் பூரி

nathan