சாய் பல்லவியின் சகோதரியும் நடிகையுமான பூஜா கண்ணனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
நடிகை சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பிரேமம் படத்தில் அவரது நடிப்பு தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றது.
சாய் பல்லவியின் தங்கையான நடிகை பூஜா கண்ணன் தமிழில் ‘சித்திரை செவ்வானம்’ படத்தில் தோன்றினார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.
இந்த நிலையில், பூஜா கண்ணன் அவரது திருமணம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “இதுவரை என்னுடைய க்ரைம் பார்ட்னராக இருந்த வினீத். இனி என் வாழ்க்கைத் துணையாக இருக்கப் போகிறார்” என்று தெரிவித்துள்ளார்.