26.2 C
Chennai
Friday, Jan 17, 2025
parul chaudhary
Other News

அர்ஜூனா விருது பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது மற்றும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது ஆகியவை ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.

mohammed shami 1

இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது மற்றும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகளுக்கான வீரர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

உலகக் கோப்பை வீரர் முகமது ஷமி, செஸ் வீராங்கனை வைஷாலி, ஹாக்கி வீரர் கிரிஷன் பகதூர் பதக், ஹாக்கி வீராங்கனை சுஷிலா சானு உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.

parul chaudhary

இதேபோல் தமிழக செஸ் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ்க்கு துரோணாச்சார்யா விருதும், தமிழகத்தை சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

 

இந்நிலையில்தான் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி  கலந்து கொண்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

 

அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலியும் அர்ஜுனா விருதை வென்றார். வில்வித்தை, ஹாக்கி, தடகளம், செஸ், பூப்பந்து, குதிரையேற்றம், கோல்ஃப், கபடி, ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் மற்றும் பாராகானோயிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

Related posts

உலகின் மிகப்பெரிய பணியிடமான சூரத் டயமண்ட் -பிரதமர் மோடி திறந்து வைப்பு

nathan

24 வயது இளைய நபருடன் சென்ற தாய்!

nathan

அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள்தான்- சனி மாறும் இடத்தில் சுக்கிரன்..

nathan

செம்டம்பர் மாதத்தில் சிறப்புமாக வாழப் போகும் ராசிகள்!

nathan

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..

nathan

உயிர்தோழியுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் 5 வங்கிகள்

nathan

விஜயகாந்த் மகனின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா?

nathan

லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது

nathan