ஆட்டிஸம் பாதித்த குழந்தையை நீங்கள் கவனித்து வரும் பொழுது, நீங்கள் மனதாலும் உடலாலும் வலுவாக இருப்பது மிகவும் அவசியம்.
பெற்றோர்களே ஆட்டிஸம் பாதித்த குழந்தை மீது அன்பு செலுத்துவது எப்படி
ஆட்டிஸம் பாதித்த குழந்தையை கவனித்துக் கொள்வது என்பது எல்லா பெற்றோருக்கும் மிகவும் கடினமானதே. ஆட்டிஸம் பாதித்த குழந்தையின் பெற்றோர்களாகிய உங்களுக்கு, உங்கள் குழந்தையின் சவால்களை சமாளிக்க உதவும் பல்வேறு வழிகள் உள்ளன.
ஆட்டிஸம் பாதித்த குழந்தையை நீங்கள் கவனித்து வரும் பொழுது, நீங்கள் மனதாலும் உடலாலும் வலுவாக இருப்பது மிகவும் அவசியம். இது உங்கள் குழந்தைக்கு, நீங்கள் உங்களின் சிறந்ததையே கொடுக்க உதவுவதோடு உங்களுடைய குழந்தையுடனான உங்களின் பிணைப்பை வலிமையாக்கும். நாங்கள் இங்கே உங்களுக்கு ஒரு ஆட்டிஸம் பாதித்த குழந்தையை சமாளிக்க உதவும் வழிகளை பார்க்கலாம்.
* நீங்கள் ஆட்டிஸத்தின் அறிகுறிகள் முதல் அதற்கான பல்வேறு சிகிச்சை முறைகள் வரை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் அதைப் பற்றி தெரிந்து நன்றாகத் தெரிந்து கொள்வது, நீங்கள் உங்கள் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்ள உதவும்.
* ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட பிற குழந்தைகளின் பெற்றோர்களுடன் நீங்கள் இணைந்திருங்கள். இது ஆட்டிஸம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள மற்றும் ஆலோசனைகளைப் பெற மிகவும் உதவியாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து உங்களின் கடினமான காலக்கட்டத்தை கடந்து வர முயற்சி செய்யுங்கள்.
* உங்கள் பிள்ளையின் அறிகுறி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சைகளை தேர்வு செய்யுங்கள். பொதுவாக, ஆட்டிஸத்திற்கு நடத்தை சிகிச்சை, பேச்சு மொழி சிகிச்சை, நாடகம் சார்ந்த சிகிச்சை, உடல் சிகிச்சை, தொழில் சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து சிகிச்சை போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
* உங்களின் குழந்தையால் பேச இயலாவிட்டால், அவர்களுடன் உரையாட சொற்கள் அல்லாத வழிகளை கண்டுபிடியுங்கள். இந்த சொற்கள் இல்லாமல் பேசும் முறையில், குழந்தைகள் படங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்த முடியும். இது பேச இயலாத ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளிடம் நல்ல பலன்களைத் தருகின்றது.
* ஆட்டிஸம் பாதித்த குழந்தையை அன்போடும் மரியாதையோடும் கையாளுங்கள். ஒவ்வொரு நாளையும் சிறந்த நாளாக உங்களுடைய குழந்தைக்கு கொடுத்திடுங்கள். உங்கள் குழந்தை நீங்கள் அவரை நேசிப்பதை உணர வேண்டும். மேலும் அவர்கள் தானும் ஒரு முழுமையான மற்றும் பயனுள்ள நபர் போல் உணர்ந்து வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டும்.