பார்த்ததுமே வாயில் எச்சில் ஊற வைக்கும் ஒன்று தான் மாங்காய். அதிலும் இதனை மிளகாய் தூள் மற்றும் உப்புடன் சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். இதுவரை மாம்பழத்தில் நன்மைகளைப் பற்றி தான் பார்த்திருப்போம், மாங்காயின் நன்மைகளைப் பற்றி பார்த்ததில்லை.
இன்று நாம் பார்க்கப் போவது மாங்காய் சாப்பிடுவதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்னவென்று என்பது தான். மாம்பழத்தை விட மாங்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளது. அதில் குறிப்பாக உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவி புரியும். அதிலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
ஆனால் அந்த மாங்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதனால் செரிமான பிரச்சனை, தொண்டை கரகரப்பு, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே எதையும் அளவாக சாப்பிட வேண்டும்.
சரி, இப்போது மாங்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
எடை குறையும்
மாம்பழத்தில் தான் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளது. மாங்காயில் கலோரிகள் இல்லை. எனவே இதனை எடையை குறைக்க நினைப்போர் அச்சமின்றி சாப்பிடலாம்.
அசிடிட்டி
உங்களுக்கு அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருந்தால், மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் மாங்காய் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும்.
கர்ப்பிணிகளுக்கு..
கர்ப்பிணிகளுக்கு காலையில் மிகுந்த சோர்வு மற்றும் வாந்தி ஏற்படும். அப்போது மாங்காயை வாயில் போட்டுக் கொண்டால், அந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
எனர்ஜி அதிகரிக்கும்
மாங்காய் சாப்பிட்டால், உடலின் எனர்ஜி அதிகரிக்கும். அதிலும் இதனை மதிய உணவிற்கு பின் உட்கொண்டால், மதிய வேளையில் ஏற்படும் அரைத்தூக்க நிலையில் இருந்து விடுபடலாம்.
கல்லீரலுக்கு நல்லது
மாங்காய் கல்லீரலுக்கு நல்லது. எப்படியெனில் மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு, குடலில் ஏதேனும் பாக்டீரியல் தொற்றுகள் இருந்தாலும் அதை சரிசெய்து, குடலை சுத்தப்படுத்தும்.
வியர்க்குரு
மாங்காய் சாப்பிட்டால், வியர்குரு வருவது தடுக்கப்படுவதோடு, அதிகப்படியான வெயிலால் ஏற்படும் அபாயங்களும் தடுக்கப்படும்.
இரத்தத்திற்கு நல்லது
மாங்காயில் உள்ள வைட்டமின் சி சத்தினால், இரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிப்பதோடு, புதிய இரத்தணுக்களின் உற்பத்திக்கும் உதவுகிறது.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டால், மாங்காயை உப்பு மற்றும் தேனில் தொட்டு சாப்பிடுங்கள். இதனால் மலச்சிக்கல் உடனே நீங்கும்.
அதிகப்படியான வியர்வை
மாங்காயை ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம், கோடையில் வியர்வையின் மூலம் உடலில் இருந்து உப்பான சோடியம் குளோரைடு மற்றும் இரும்புச்சத்து அதிகம் இழக்கப்படுவது தடுக்கப்படும்.
நீரிழிவு
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
பல் பராமரிப்பு
மாங்காய் சாப்பிடுவதன் மூலம், ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். அதிலும் மாங்காய் ஈறுகளில் இரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையாவதைத் தடுக்கும்.
நோயெதிர்ப்பு
சக்தி மாங்காய் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, கோடையில் ஏற்படும் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.