27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Sanjay Gadhvi
Other News

தூம் பட இயக்குநர் மும்பையில் மாரடைப்பால் மரணம்

“தூம்” படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி (57) மாரடைப்பால் மும்பையில் இன்று காலமானார்.

சஞ்சய் காத்வி 2001 இல் தேரே லியே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் அவர் “தூம்” (2004) மற்றும் “தூம் 2” (2006) ஆகிய படங்களை இயக்கினார். ஹிருத்திக் ரோஷன் மற்றும் அபிஷேக் பச்சன் நடித்த இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

சஞ்சய் காத்விக்கு இன்று காலை மும்பை லோகந்த்வாலா வளாகத்தின் பின் சாலைகளில் நடந்து சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் கோகிலாபெனில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது மறைவு செய்தி கேட்டு ஹிந்தி திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. சஞ்சய் காத்வி மறைந்த குஜராத்தி எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மனுபாய் காத்வியின் மகன் ஆவார்.

Related posts

. பிரபல நடிகர் கலாபவன் ஹனீஃப் காலமானார்!

nathan

50 வயது நபருடன் 28 வயது பெண் கள்ளக்காதல்… நடந்த ட்விஸ்ட்!!

nathan

நடைபெற்ற அமீர் கான் மகள் திருமணம்!

nathan

நடிகர் நகுல் மனைவி -மார்பகம் பாலூட்டுவதற்கு தான்..!

nathan

இலங்கை வந்தார் திருமதி உலக அழகி

nathan

24 வயது இளைய நபருடன் சென்ற தாய்!

nathan

சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்

nathan

நிறை மாதத்தில் டான்ஸ் ஆடிய அமலாபால்

nathan

கேப்டனை பார்க்க மலர்மாலையுடன் வந்த விஜய்.. வெளியான காட்சி

nathan