29.5 C
Chennai
Friday, May 23, 2025
BXC8c47L0v
Other News

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

கம்பஹாவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிதிபெல பொலிஸார் தெரிவித்தனர். ஊராபொர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குழந்தையின் தாயான கே.ஏ.சஞ்சீவனியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

இவரது கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், விசாரணையில் அந்த பெண் தனது கணவரின் தாய், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் கணவரின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது.

 

 

வீட்டின் வரவேற்பறையின் நடுப்பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்ட மாமியார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தாயாருக்கு அறிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். பூகொட உப நீதவான் கமல் சமந்தபெரும சம்பவ இடத்திற்குச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

 

 

சடலத்தை படுபிட்டிபர வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரரை காணவில்லை எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

சந்திரயானுக்குப் பிறகு சமுத்திரயான்! இந்திய விஞ்ஞானிகள்!

nathan

திருமணத்தில் கலந்துகொண்ட இயக்குனர் பாக்யராஜ்

nathan

இரண்டே வருடத்தில் விவாகரத்தை அறிவித்த – விஜய் பட நடிகை!

nathan

கோர்ட்டுக்கே டிமிக்கி கொடுத்த போலி வக்கீல்..

nathan

தீயாக பரவும் ரம்பாவின் ஹாட் லுக் போட்டோஸ்.!! கவர்ச்சியும் இன்னும் குறையவே இல்லை..

nathan

தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்… குழந்தை வெளியே வராததால்

nathan

இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

nathan

காமெடி நடிகர் #SESHU காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

nathan

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்…

nathan