29.6 C
Chennai
Tuesday, Apr 22, 2025
BXC8c47L0v
Other News

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

கம்பஹாவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிதிபெல பொலிஸார் தெரிவித்தனர். ஊராபொர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குழந்தையின் தாயான கே.ஏ.சஞ்சீவனியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

இவரது கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், விசாரணையில் அந்த பெண் தனது கணவரின் தாய், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் கணவரின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது.

 

 

வீட்டின் வரவேற்பறையின் நடுப்பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்ட மாமியார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தாயாருக்கு அறிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். பூகொட உப நீதவான் கமல் சமந்தபெரும சம்பவ இடத்திற்குச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

 

 

சடலத்தை படுபிட்டிபர வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரரை காணவில்லை எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

பண்ணை வயல்… நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இப்படி ஒரு விவசாயமா?

nathan

நடிகர் விஜய்… குடும்பத்தில் குழப்பமா?

nathan

செம ஹிட் நடிகை இவர்: சிறுவயது புகைப்படம்

nathan

பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா?

nathan

குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்ற விஜய், நடனமாடிய மகள்

nathan

ஜட்டி போன்ற குட்டி டிரவுசர் போட்டு போஸ் கொடுத்த ராஷ்மிகா!

nathan

பிக்பாஸ் பாவனியை காதலித்து ஏமாற்றிவிட்டாரா அமீர்?

nathan

நெப்போலியன் மகன் திருமணத்தில் இர்பான் கொடுத்த பரிசு…

nathan

அனிருத்துடன் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்!வீடியோ

nathan