29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவு

‘நல்ல’ எண்ணெய்

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு ஆரோக்கியதுக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெயை குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர் காலந்தொட்டு பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுப்பது இது ஒரு வகையான ஆயுர்வேத முறைதான்.

நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது அதில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி பின் அந்த நல்லெண்ணெயை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். நவநாகரீகம் என்கிற பெயரில் இதையெல்லாம் மறந்ததன் விளைவால் தான் முடி உதிர்வதோடு பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. வாரமொரு முறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

அடர்த்தியான முடி வளரும்

நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர் கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு முடி அடர்த்தியாகவும் இருக்கும்.

உடல் சூட்டை தணிக்கும்.

நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மஜாஜ் செய்து குளித்தால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பொலிவான சருமம்

எண்ணெய் குளியல் என்று சொல்லும் போது தலைக்கு மட்டுமின்றி உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மஜாஜ் செய்து குளித்து வந்தால் சருமம் பொலிவோடு மென்மையாக இருக்கும். பொடுகு தொல்லையும் தீரும்.

Related posts

ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால்

nathan

சுவையாக இருக்கும் கீரை குழம்பு

nathan

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

nathan

சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

சூப்பர் டிப்ஸ் ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து.

nathan

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது பசலைக்கீரை

nathan

உங்களுக்கு தெரியுமா இத்தனை சத்துக்களை கொண்டுள்ளதா சர்க்கரை வள்ளி கிழங்கு…..?

nathan

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முட்டைகோஸ் ரொட்டி

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகள் பேரீட்சை சாப்பிடலாமா?

nathan