20 1432125204 4 curd
ஆரோக்கிய உணவு

இரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா? கூடாதா?

கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஒருசில உணவுப் பொருட்களை சாப்பிடுவோம். அப்படி உடலை குளிர்ச்சியாக வைக்க சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் தான் தயிர். இத்தகைய தயிரை பலரும் கோடையில் அதிகம் சாப்பிடுவோம்.

மேலும் தயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. அதே சமயம் நல்ல பாக்டீரியாக்களும் வளமையாக நிறைந்துள்ளது. எனவே தயிரை சாப்பிடுவதால், எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.

ஆனால் அத்தகைய தயிரை இரவில் சாப்பிடக்கூடாது என்ற மிகவும் பிரபலமான விதிமுறை உள்ளது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் தயிரை சாப்பிடுவதில் ஒருசில விதிமுறைகள் உள்ளன.

இருமல் மற்றும் சளி

சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. மேலும் இதனை ஆயுர்வேத மருத்துவமும் கூறுகிறது. அது என்னவெனில், தயிரை இரவில் தனியாக அப்படியே சாப்பிடுவதால் சளியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகவும். எனவே இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்களால் தயிர் சேர்க்காமல் இருக்க முடியாதெனில் மோர் குடிக்கலாம்.

சர்க்கரை சேர்க்கலாம்

தயிரை பகல் நேரத்தில் சாப்பிடும் போது, அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தும், அதுவே இரவில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத் தூளை சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, வயிறும் குளிர்ச்சியடையும்.

தயிர் சாப்பிட சில அடிப்படை விதிமுறைகள்

உங்களுக்கு தயிர் மிகவும் பிடிக்குமானால், அதனை பயமின்றி எந்நேரமும் சாப்பிட ஒருசில டிப்ஸ் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தயிரின் சுவையை ரசியுங்கள்

. * தயிரை சர்க்கரையுடன் கலந்து சாப்பிடலாம்.

* மோர் போன்று செய்து குடிக்கலாம்.

இரவிலும் தயிர் சாப்பிட சில அடிப்படை விதிமுறைகள்

* வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து பச்சடி போன்று செய்து சாப்பிடலாம்.

* தயிரை மோர் குழம்பாக சமைத்து சாதத்துடன் சாப்பிடலாம்.

20 1432125204 4 curd

Related posts

வெள்ளைப்படுத்தல் பிரச்சனைக்கு குட்பை சொல்லும் உணவுகள்

nathan

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை

nathan

டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிளகு தோசை

nathan

ஏன் தினமும் மலையாளிகள் மரவள்ளிக் கிழங்கு சாப்பிடறாங்கன்ற ரகசியம் தெரியுமா?.

nathan

நெல்லிக்காய் கறிவேப்பிலை ஜூஸ் பயன்கள்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! பாலும்… வாழைப்பழமும் ஒன்றாக சாப்பிடுவது நல்லதா?…

nathan

நீரிழிவு நோயாளிகள் தேங்காய் பால் எடுத்துக்கொள்வது ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை

nathan

30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்

nathan