தேவையான பொருட்கள்:
* பொரி – 2 கப்
* பொடித்த வெல்லம் – 1/2 கப்
* நெய் – தேவையான அளவு
* முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பொரியை நீரில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் பொடித்த வெல்லத்தை சிறிது நீர் ஊற்றி கரைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பொரியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, பொரியில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் பொரியைப் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
Diwali Special Puffed Rice Halwa Recipe In Tamil
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி, அதைத் தொடர்ந்து அரைத்த பொரியையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* ஒரு கட்டத்தில் கலவையானது சற்று கெட்டியாகி, அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அப்போது வேண்டுமானால் சிறிது நெய் ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை நன்கு கிளறி இறக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டால், சுவையான பொரி அல்வா தயார்.