27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1 kothukari 1667649776
சமையல் குறிப்புகள்

மட்டன் கொத்துக்கறி ரெசிபி

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத மட்டன் – 1/2 கிலோ

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – 1/2 கப்

மசாலாவிற்கு…

* தேங்காய் எண்ணெய் – 1/4 கப்

* சோம்பு – 2 டீஸ்பூன்

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3 (நீளமாக கீறியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது1 kothukari 1667649776

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் குக்கரில் மட்டனைப் போட்டு, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 12-15 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

Mutton Kothu Kari Recipe In Tamil
* பிறகு அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின் அதில் வேக வைத்த மட்டனை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு நீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.

* மட்டனில் இருந்து நீர் முற்றிலும் வற்றியதும், மேலே மிளகுத் தூளை தூவி கிளறி, அதன் பின் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மட்டன் கொத்துக்கறி தயார்.

Related posts

பசலைக்கீரை சாம்பார்

nathan

சிலோன் சிக்கன் பரோட்டா…

nathan

சுவையான முகலாய் முட்டை கிரேவி

nathan

சுவையான மீல் மேக்கர் வெஜிடேபிள் குருமா

nathan

சுவையான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ

nathan

புதினா தொக்கு

nathan

வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி?

nathan

சுவையான வெஜ் புலாவ்

nathan

சுவையான உடுப்பி ஸ்டைல் சாம்பார்

nathan