கேஜி ஜார்ஜ் மலையாளத் திரையுலகில் நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்டவர். வயது முதிர்வு காரணமாக இன்று இயற்கை எய்தினார். கே.ஜி.ஜார்ஜ் கொச்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் சில காலம் வசித்து வந்தார். பல மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
‘நெல்’ படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக திரையுலகில் நுழைந்த கே.ஜி.ஜார்ஜ், ‘ஸ்வப்நாதனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது ஸ்வப்நாதனம் திரைப்படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. அதேபோல் இவர் இயக்கிய கிளாசிக் ஹிட்டான ‘யவனிகா’ படத்துக்கும் மாநில விருது கிடைத்தது.
திரையுலகில் தனது 40 ஆண்டுகால பணியில் 19 படங்களை இயக்கியுள்ளார். பழம்பெரும் இயக்குனர் கேஜி ஜார்ஜ் மறைவு மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த இயக்குனர் கேஜி ஜார்ஜ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.