mdgyItZ
பழரச வகைகள்

மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

எப்போதும் ஒரே மாதிரி ஸ்மூத்தி செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று மாலை சற்று வித்தியாசமாக மாம்பழத்துடன், தேங்காய் பால் சேர்த்து ஸ்மூத்தி செய்து சுவையுங்கள். இது உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.

இங்கு மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மாம்பழம் – 1
தேங்காய் பால் – 1/2 கப்
குளிர்ந்த பால் – 1/4 கப்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன் ச
ர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் – 4
உலர் திராட்சை – 4

செய்முறை:

முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாம்பழம், தேங்காய் பால், குளிர்ந்த பால், தயிர், தேன், சர்க்கரை, பாதாம், உலர் திராட்சை ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றிப் பரிமாறினால், சுவையான மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி ரெடி!!!

mdgyItZ

Related posts

தேவையான பொருட்கள்:

nathan

தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

nathan

வெள்ளரிக்காய் மோர்

nathan

உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்!….

sangika

சுவையான சத்தான பாதாம் பால்

nathan

கோடை வெப்பத்திற்கு இதமான மாம்பழ ஜூஸ்

nathan

மேங்கோ பைனாபிள் லஸ்ஸி

nathan

வாட்டர் மெலன் சோடா

nathan

தர்பூசணி – ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

nathan